என் ஓட்டம் என் இலக்கு: பூ. சுப்ரமணியன்


நல்லவற்றைக் கூட்டி
தீயவற்றைக் கழித்து
அன்பைப் பெருக்கி
இனிய வாழ்க்கையினை
அனைவர் வாழ்க்கையிலும்
வகுத்து வாழச் செய்வதே
என் ஓட்டம் என் இலக்கு !
வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளலார்
வாழ்ந்து காட்டிய வழியில்
ஜீவகாருண்யம் மனிதநேயமுடன்
எப்போதும் வாழ்ந்து வருவதே
என் ஓட்டம் என் இலக்கு !
உலகம் எங்கும் சமாதானப்
புறாக்களைப் பறக்க விட்டு
ஒற்றுமையை வளர்த்துவறுமை
யை விரட்டி
பெருமையுடன் வாழ்வதே
என் ஓட்டம் என் இலக்கு !
துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாமல்
துன்பமே துவண்டு விடும்படி
இனிய வாழ்க்கையினை
நம்பிக்கையுடன் வாழ்வதே
என் ஓட்டம் என் இலக்கு !
முடியாது எனக் கூறும்
பனித்துளிகளைக் கண்டு
தயங்கி நிற்காமல்
நம்பிக்கை என்னும்
சூரியசக்தி நம்மிடம் இருக்கிறது
இனிய வாழ்க்கையினைஎப்போ
தும் வாழ்ந்து காட்டுவதே
என் ஓட்டம் என் இலக்கு !
அழுவதே வாழ்க்கையில்லை
அழாமல் இருந்தாலும்
வாழ்க்கையில்லை என
அனைவரும் உணரும்படி
இனிய வாழ்க்கையினை
வாழ்ந்து காட்டுவதே
என் ஓட்டம் என் இலக்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...